Saturday, 12 January 2019

உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்!

ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். அதன்படி 3 என்ற எண் மிக முக்கியமான எண்ணாக பார்க்கப்படுகிறது. உங்கள் பெயரில் மூன்றாவதாக வரும் எழுத்திற்கும் உங்கள் குணத்திற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த செய்தியில் எந்தந்தெந்த எழுத்திற்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என வழங்கியுள்ளோம். உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தில் என்ன குணங்கள் இருக்கிறது, உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களின் மூன்றாவது எழுத்தில் என்னென்ன குணங்கள் உள்ளது என பார்க்கலாம் வாருங்கள்.

A என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.

B ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

C என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.

ஆங்கிலத்தில் D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். D என்ற எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.

E என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள். ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.

F - என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

G- என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.

H - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும். பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்றும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.

I - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.

J - என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

K - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.

L - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.

M - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமைய ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.

N - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.

O- என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.

P - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.

Q - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.

R - என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.

S- என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.

T - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.
U- ஆங்கிலத்தில் என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரியும். புதிய புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.

V- என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.

W - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.

X - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள்.

Y- என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.

Z - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்றும் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை பாடம்:

*பிரச்சினையா?*
*அசௌகரியமா?*

அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர், *’நான் கற்ற பாடம்’* என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. *வேலைப்பளு அதிகம்* இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் *உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்.*

‘முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். *எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?’* என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார்.

அவர் பேசியதில் *’பிரச்சினை’* என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்:

*‘நீ பேசும்போது பிரச்சினை’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?*

உனக்கு முதுகுத்தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது *பிரச்சினை.*

உன் வீடு எரிந்துபோய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது *பிரச்சினை...*

*ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே பிரச்சினை.*

இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்.
மற்றபடி நீ *பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள்* *(inconveniences).*

இதுபோன்ற *அசௌகரியங்கள்* வாழ்க்கையில் நிறைய வரும். *அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும்.*
ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, *அற்ப விஷயங்களாகத் தோன்றும்.*

இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள்.

*நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது‘* என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.

அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது.

அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் அது *உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா* என்று என்னையே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது.

*கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது"* என்று அனுபவப் பூர்வமாகச் சொல்லியிருந்தார்..

*நாமும் நிதானமாக யோசிப்போம்:*
*நமது பிரச்சினை உண்மையில் பிரச்சினைதானா,*
*இல்லை தற்போதைய அசௌகரியமா என்று!*
நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க சில வழிகள்.

1. தியானம்

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.

நோக்குவர்மம்

நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியமே.

இந்த பதிவை படிக்கும் முன் செய்ய வேண்டியவை .. முதலில் நீங்கள் தளர்வு நிலையில் இருக்க வேண்டும் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கருத்துகளை சிந்தித்து கொண்டு படிக்க வேண்டாம். திறந்த மன நிலையில் படியுங்கள்.
நோக்கு(நோக்கம்) + வர்மம்(கலை) நம் கண்ணால் பார்க்கும் அணைத்து உயிரையும் தன் வசபடுத்துதல் என்பது பொருள்.
இந்த பிரபஞ்சத்திலேயே மனித ஆற்றலுக்கு மேலே எந்த சக்தியும் இருந்தது இல்லை. இந்த பூமியின் உயிரினங்களினுடைய பரிணாம வளர்ச்சியில் உச்சநிலையே மனித உடம்புதான்.
மனிதன் மிருகமாகவும் வாழலாம் தெய்வமாகவும் வாழலாம். அந்த தெய்வீக நிலையில் இருப்பவருக்கு நோக்குவர்மம் கை வந்த கலை.
நான் தலைப்பில் எழுதியதை போல நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியம். நோக்குவர்மம் கற்று வருவது கிடையாது. அது ஒரு நிலை அவ்வளவுதான்.
அந்த நிலையை அடைய முதலில் உங்களுக்கு தேவை தெளிவு.
தெளிவு என்று நான் குறிப்பிடுவது உங்கள் சுமையை இறக்கி வைக்க வேண்டும். சுமை என்றால் உங்கள் சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள். அதுதான் உங்கள் தெளிவை மறைத்து உங்களை ஏமாற்றிவிடும்.
இதுக்கு ஒரு குட்டி உதாரணம். உங்கள் அருகில் இப்போது இருக்கும் பொருளை கையில் எடுத்து ஒரு 15 நிமிடம் வைத்து பாருங்கள். உடனே உங்கள் கை மரத்து போய்விடும் பின் வலி தான் மிச்சம். இதே தான் உங்கள் எண்ணத்தில் ஓடும் நபரையோ இல்லை உங்கள் குடும்பத்தையோ எப்போதும் சுமந்து கொண்டு உங்கள் மூளையை மரத்து விட செய்கிறீர்கள்.
உங்களுக்கு நோக்கம் (இலக்கு) மட்டும் தான் இருக்க வேண்டும். இப்படி நோக்கம் மட்டுமே இருக்கும்பொது வாழ்க்கை இனிப்பாக மாறும். அந்த தெளிவு உங்களை உண்மையின் அருகில் எடுத்து செல்லும்.
நீங்கள் தெளிவுடன் நடந்து செல்லும்போது உங்கள் முன் வரும் அனைத்தையும் நீங்கள் தெளிவுடன் பார்க்கும் பொது வெற்றியின் வாசல் படியில் நீங்கள் கால் எடுத்து வைப்பீர்கள்.
அந்த நொடியில் தான் நோக்குவர்மம் விதை உங்களுக்குள் வந்து விழும். அந்த விதை விழுந்த உடன் நீங்கள் உடல் மனம் என்ற குறுகிய எல்லையை கடந்து உயிர் தான் நிரந்திரமானது என்ற உண்மையை உங்களுக்குள் நிலைநிறுத்துவீர்கள் (அனுபவபூர்வமாக).
பின் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் கட்டு பாட்டுக்குள் வர தொடங்கும். உங்கள் சிந்தனைகள் எண்ணங்கள் சாயிந்து விடும். இப்போது இங்கே நோக்கம் மட்டும் தான்.
புத்தர் குள்ளும் இது தான் நிகழ்தது. அவர் நோக்கு வர்மத்தில் வல்லவர்.
உங்களுக்குள் விழுந்த அந்த விதை வளர தொடுங்கும்போது. நீங்கள் எந்த உயிர் முன் சென்றாலும் உங்கள் நோக்கம் அவருக்கு தெரிந்துவிடும். அவர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த செயலை செய்வார்.
நீங்கள் யாரை பார்த்தாலும் அனைவரும் உங்கள் கட்டுபாட்டுக்குள் வருவார்கள். அந்த தெளிவு உங்களை கூட்டிசெல்லும் இடமும் அப்படித்தான் இருக்கும். உங்கள் பேச்சு முற்றிலும் குறையும்.
புரியாத விஷயம் என்று எதுவுமே இருக்காது. த்யானம் தானாகவே உங்கள் அங்கமாகிவிடும். நீங்கள் இந்த நிலையில் வாழும்போது உங்கள் முன் வரும் அணைத்து உயிரின் என்ன ஓட்டத்தை எளிதாக வாசிக்க முடியும்.
இப்போது நீங்கள் தெளிந்த நீரோடை போல மாறி விடுவீர்கள். உங்கள் கண்களில் அன்பும் அமைதியும் வேரூன்றி நிற்கும். எண்ணங்கள் காணமல் போய்விடும் நோக்கம்(இலக்கு) மட்டும் தான்.
ஆயற்கலைகள் 64 ங்கும் அதன் விளக்கமும். 
சரஸ்வதி தேவியின் அருள் இன்றி இவ் உலகத்தில் எதுவுமில்லை...

1அக்கர விலக்கணம்

எழுத்திலக்கணம். எழுத்துக் கூட்டு முறைத்திறன்.
Orthography (spelling considered to be correct)

2 அஸ்திர பரீட்சை

கட்ட எறிவு விளையாட்டுக்குரிய எறிமுட்கோலைக் குறிக்கப்பட்ட இலக்குக்கு ஏவும் கலைஞானம
Archery: Science of throwing dart (small light pointed missile targeting a marking)

3 அலங்காரம்

அணியிலக்கணம். பகட்டாரவாரச் சொல்லாட்சித் திறன்
Art of effective speaking or writing

4 அசுவபரீட்சை

குதிரையொன்றின் பாய்ச்சல் திறமையை அதன் அங்க அடையாளங்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கும் கலை
Art of identifying a horse with skills in racing from the marks on the body

5 அதிரிசியம்

காண முடியாதபடி மிகச் சிறிதானதாக மாறக்கூடிய ஆற்றல் திறன்
Power of making one’s self-invisible

6 அக்கினித்தம்பனம்

எரியும் நெருப்பைத் தணியச் செய்யும் திறன்
Art of restraining the action of fire

7 அவத்தைப் பிரயோகம்

பில்லிசூனியம் (உளரீதியான தாக்கம் ஏற்படுத்தி) ஒருவருக்கு மரணம் ஏற்படுத்தும் கலைஞானம்
Art of using witchcraft (psychological) tactics to kill a person

8 ஆகருடனம்

மதி மயங்கச் செய்து வசமாக்கி மகிழ்ச்சியூட்டும் கலையைப் பிரயோகித்து வரவழைத்தல் திறன்
Art of summoning someone of his choice by enchantment

9 ஆகாயப்பிரவேசம்

ஆகாயத்துள் பிரவேசித்து மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் மாயமாக மறையும் திறன்
Art of entering into air and become invisible

10 ஆகாயகமனம்

ஆகாயத்தில் மற்றவர்கள் பார்க்கத்தக்கவாறு நடைபயிலும் திறமை
Art of walking in the air

11 இலிகிதம்

எழுதும் திறமை. இலக்கியக் கட்டுரை அல்லது செய்யுளின் பாணி
Calligraphy Penmanship

12 இதிகாசம்

வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட
வீரப் பண்புகளையுடைய உன்னத காவியம்.
Traditional historical accounts of heroic events

13 இரத பரீட்சை

தேர் ஓட்டும் கலைஞானம்
Charioteering: Art of driving chariots

14 இரத்தினப்பரீட்சை

அணிமணித்தொகுதியான இரத்தினக் கற்களைத் திறனாய்வு செய்யும் கலைஞானம்
Art of examining and choosing precious stones

15 இரசவாதம்

உலோகங்களைப் பொன்னாக்கும் வேதியியல் பயன்முறை
Alchemy and Chemistry

16 இந்திரஜாலம்

வியத்தகு மாயத்துக்குட்படுத்தும் கலை
Art of conjuring, Art of performing magical tricks

17 உருவ சாஸ்திரம்

முகத்தோற்றத்திலிருந்து அல்லது உடலமைப்பிலிருந்து ஒருவர் குணாதிசயத்தை அறியும் கலைஞானம்
Physiognomy, Metoposcopy. Chiromancy or palmistry.

18 உச்சாடனம்

(மனப்) பேயை ஓட்டுவதற்கான மந்திரிக்கும் கலைஞானம்
Science that treats exorcism

19 கணிதம்

கணக்குச் சார்ந்த எண்கணிப்புக் கலைஞானம்
Science of numbers: Arithmetical computation

20 கனகபரீட்சை

தங்க உலோகங்களைப் பரிசோதித்தறியும் திறன்
Gold testing: Art of acquaintance of gold metals.

21 கச பரீட்சை

யானைகளின் தரங்களை நிர்ணயிக்கும் கலைஞானம்
Art of examining elephants

22 கவுத்துகவாதம்

கவலையைப்போக்கி மகிழ்ச்சியை மீண்டும் ஏற்படுத்தும் கலைஞானம்
Art of restoring pleasure to a sorrowful mind

23 கன்னத்தம்பம்

மறைத்துவைக்கப்பட்ட பொருட்களை நுட்பமாகக் கண்டுபிடித்துக் கூறும் கலைஞானம்
Art of presenting discovery of concealed things

24 கட்கத்தம்பம்

வாளுடன் அல்லது ஆயுத்ததுடன் எதிர்ப்;படும் ஒருவனின் தாக்குதலை தன் உடல் பலத்தைப் பாவித்து முறியடிக்கக்கூடிய வீரதீரத் திறன்
Art of nullifying power of sword or weapon

25 காவியம்

கதாநாயகர்களின் வீரதீரச் செயல்களைக் கூறும் தொடர் நிலைச் செய்யுள்
Epic poetry

26 காந்தருவவாதம்

விண்ணுலகம் சார்ந்த பண்ணிசை அறிவாற்றல்
Knowledge of condition of celestial choristers

27 காருடம்

பாம்புக்கடி நஞ்சைப் போக்கி உயிர் பிழைக்க வைப்பதற்காக இசையோடு பாடிக் கருடனை வரவழைத்துக் குணப்படுத்தும் கலைஞானம்
Charms, incantations against poison

28 சத்தப்பிரம்மம்

வலிவும் மெலிவும் என்று சொல்லப்படும் ஓசை இசைக் கூறுபாடுகளை மேலாட்சி செய்யும் கலைஞானம்
Directions of modulations of sound

29 சகுனசாஸ்திரம்

புpன் வருவது பற்றிய முன்குறிப்புரைகளை உணரும் ஞானம்
Science of prognosticating by omens and augury

30 சலத்தம்பம்

தண்ணீர் நிலையில் அமிழாமல் இருப்பதற்கு எதிர் விளைவேற்படுத்தும் கலைத்திறன்
Science of counter- yielding of water for surface- walk

31 சங்கிராமவிலக்கணம்

போர் வீரர்களுக்குரிய படையணிச் சூழ்ச்சி முறைகள் பற்றிய கலைஞானம்
Art of military tactics

32 சுக்கிலத்தம்பம்

பெண்ணொடு புணரும் சமயம் சுக்கிலம் வெளியேறாமல் ஆணொருவன் கட்டுப் படுத்தும் மனப்பக்குவத் திறன்
Art of restraining the semen virile: Deliberately restraining from ejection of semen (sperms) during copulation by mental control

33 சிற்பசாஸ்திரம்

சிற்பம் செதுக்குதல். குழையோவியம் வரைதல். இயந்திர நுட்பம் சார்ந்த உருவரைத் தோற்றங்கள் கட்டமைக்கும் கலைஞானம்
Architecture, Mechanical shapes and Sculptures

34 சோதிடசாஸ்திரம்

சோதிடம் உட்பட்ட வான்கோள்கள் ஆய்வியல் திறன்
Astronomy including astrology: 
Scientific study of heavenly bodies, which includes foretelling of events from stars

35 தர்மசாஸ்திரம்

நன்னெறிக் கோட்பாடுகளடங்கிய ஒழுக்க சட்டதிட்டமுறைக் கோவை
Moral philosophy, ethics and code of laws

36 தாளம்

தாள லய ஓசை எழுப்பும் கலைஞானம்
Art of beating the cymbals (one of two brass plates struck together to produce ringing or clashing sound in music)

37 தாதுவாதம்

கைநாடி பார்த்து உடல் நிலை கணிக்கும் திறன்
Knowledge of pulse reading (movement of blood in arteries corresponding to heart beat)

38 திட்டித்தம்பம்

கண்ணால் மொழிபேசிக் கவரும் கலைத்திறன
Art of fascinating through eyes

39 நட்டம்

காணாமல் போனவைகளைக் கண்டுபிடிப்பதற்கான வான்கோள் ஆய்வுக் கணக்குகள்
Astronomical calculations for lost things

40 நாடகம்

அரங்கில் நடித்துக் காட்டுவதற்குத் தகுந்த மேடைக் களியாட்டம்
Dramatic Science: Play like series of events

41 நிருத்தம்

நடனமாடும் கலைத்திறன்
Ability to perform dancing

42 நீதிசாஸ்திரம்

மனிதசமுதாயச் சட்டத்துறைக் கோவை
Jurisprudence Science of, skill in law

43 பரகாயப்பிரவேசம்

ஓர் உடலைவிட்டு இன்னொரு உடலுக்குத் தாவும் கலைஞானம்
Power of leaving own body and entering another

44 புராணம்

இந்துசமய நம்பிக்கைகளடங்கிய புனித நூல்கள்
Sacred books containing Hindu Theology

45 பூமிபரீட்சை

பூமியின் மேற்பரப்பிலிருந்து கீழேயுள்ள நீர்மட்டத்தை மதிநுட்பமாக அறிந்து சொல்லும் திறன்
Determining the depth of water (availability) under the earth

46 பைபீலவாதம்

எறும்புவகை முதலாக பிராணிகளின் மொழிகள் பற்றிய அறிவுத்திறன்
Language of creatures from enmets upward

47 மகேந்திரசாலம்

விண்ணிலும் மண்ணிலும் அதிசயங்கள் நிகழ்த்தும் கலைஞானம்
Art of performing wonders on earth and heaven

48 மந்திரசாஸ்திரம்

பாசுரங்களால் இறைவன் புகழ் பாடிப் பேரின்பம் காணும் வழிபாட்டு முறை
Prayers, hymns and enchantment practice

49 மதுரபாடனமம்

சொல்வன்மை. சொற்கோப்புக் கலை
Eloquence; Powerful use of language

50 மல்யுத்தம்

குத்துச்சண்டை உடற்பயிற்சி விளையாட்டுக்களில் போற்றத்தக்க திறமை
Wrestling, gymnastics, boxing and athletic art

51 மதனசாஸ்திரம்

காமம் சார்ந்த உடற்கவர்ச்சி முறைத் திறன்
Erotics; Art of arousing sexual desire or giving sexual pleasure

52 மிருதங்கம்

மிருதங்கம், கஞ்சிரா வாசிக்கும் கலைஞானம்.
Art of beating the tambourine (flat half-drum with jingling discs of metal attached)

53 மோகனம்

சிற்றின்ப உணர்ச்சியோடு இசைந்த கவர்ச்சி காட்டி மயங்க வைக்கும் கலைஞானம்
Libidinous fascinations by enchantment

54 முட்டி

உள்ளங்கைக்குள் மறைத்து வைத்துள்ள பொருட்களை அடையாளம் காணும் திறன்
Information of things concealed in the palm

55 வசீகரணம்

கவர்ச்சியால் அடிமைப்படுத்தும் திறன்
Art of seduction by enchantment

56 வாயுத்தம்பம்

காற்றின் விசையைக் கட்டுப்படுத்தும் திறன்
Art of restraining the power of wind

57 வாக்குத்தம்பம்

நாவன்மையால் ஈர்க்கும் திறன்
Art of fascinating by speech: Attract and delight by rousing interest and curiosity

58 வித்துவேடணம்

இருசாராருக்கிடையே சாதுர்யமாகப் பகைமையை ஏற்படுத்தும் திறன்
Enchantment of hatred between parties

59 வியாகரணம்

இலக்கணவிதிமுறைப்படி அமைந்த எழுத்து அல்லது பேச்சு நடை
Grammar: Science of structure and usage of language

60 வீணை

வீணையெனும் இசைக்கருவி வாசிக்கும் திறன்
Art of playing lute or stringed instruments

61 வேணு

புல்லாங்குழல் வாசிக்கும் திறன்
Art of playing on the flute or pipe

62 வேதம்

இந்து சமய சட்ட திட்டங்கள்
Laws of Hinduism

63 வைத்தியசாஸ்திரம்

மருந்தாக்கம் அறுவை சிகிச்சை
ஆகியவற்றால் நோயைக் குணப்படுத்தும் கலைஞானம்
Science of healing, pharmacy and surgery

64 யோக சாஸ்திரம்

அமைதியான வழிபாடு. பண்பியலான தியானம

உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்! ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். ...