Monday, 8 September 2014

கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்கள் உங்களுக்கு தெரிந்தவை தெரியாதவை எதுவானாலும் சரி இந்த பதிவின் மூலம் நாம் பகிர்ந்துகொள்வோம்..

1


ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரின் மாடல் நம்பர் என்ன என்று கேட்டால் நீங்கள் உடனே கம்ப்யூட்டருக்கு சென்று CPU ஐ சுற்றி சுற்றி பார்த்துவிட்டு மாடல் நம்பர் எங்கே இருக்கிறது என தெரியாமல் யோசிக்க வேண்டாம்

உங்கள் கம்ப்யூட்டரில் Start Menu ஐ கிளிக் செய்து Run என்ற இடத்தில் msinfo32.exe என டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் மாடல், கம்ப்யூட்டர் உருவாக்கிய நாள் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.....


2

உங்கள் கம்ப்யூட்டரில் 1GB ராம் பொருத்தப்பட்டுள்ளது என வைத்துக் கொள்ளுங்கள். அதோடு இன்னொரு 1GB ராம் பொருத்த வேண்டும் என உங்களுக்கு ஒரு ஆசை உள்ளது. உடனே கம்ப்யூட்டர் கடைக்கு சென்று நீங்கள் என் கம்ப்யூட்டருக்கு 1GB ராம் பொருத்த வேண்டும் அதன் விலை என்ன என்று கேட்பீர்கள். அவர் உங்களிடம் ராம் SDRAM, DDR1, DDR2, DDR3 இதில் எந்த வகை ராம் உங்களுக்கு வேண்டும் என கேட்பார். அதை உங்கள் கம்ப்யூட்டரில் எப்படி பார்ப்பது என்று உங்களுக்கு இதுவரை தெரியாமல் இருக்கிறதா....

இண்டெர் நெட்டில் இலவசமாக உள்ள இந்த CPUZ என்ற மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யுங்கள்.


இன்ஸ்டால் செய்த பிறகு இதனை ஓப்பன் செய்து Memory என்ற தலைப்பை கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரின் உள்ளே பொருத்தப்பட்டுள்ளது எந்த வகை ராம் என தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.


3





உங்களிடம் இரண்டு போட்டோ இருக்கிறது. அது இரண்டையும் ஒரே பேப்பரில் பிரிண்ட் எடுத்தால் பேப்பர் மிச்சம் ஆகும். ஆனால் அது எப்படி என்று நமக்கு தெரியவில்லையே என்று கவலையா ? அல்லது அப்படி எடுப்பதற்கு தனியாக ஒரு மென்பொருள் வேண்டுமே என்று இது நாள் வரை நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா ?

உங்கள் போட்டோவை ஓப்பன் செய்வதற்கு முன்பாக அந்த போட்டோ ஐக்கானில் உங்கள் மவுசை வைத்து வலது பக்கம் கிளிக் செய்து வரும் தட்டில் Windows Picture and Fax Viewer என்பதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்கள் போட்டோ Picture and Fax Viewer மூலம் ஓப்பன் ஆகும். அந்த போட்டோவின் கீழ் Print என்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்கலாம். அதனை நீங்கள் கிளிக் செய்யுங்கள்.

 

அடுத்து வரும் தட்டில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோவை டிக் செய்துகொள்ளுங்கள்.


அடுத்து Next ஐ அழுத்துங்கள்.



அடுத்தும் Next  ஐ அழுத்துங்கள்.


அடுத்து வரும் இந்த தட்டில் இடது பக்கம் உள்ள Available Layout என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோ உள்ள Layout ஐ தேர்ந்தெடுங்கள்.



அடுத்து Next  .......... Next ஐ அழுத்தினால் போதும் உடனே உங்களுக்கு இரண்டு போட்டோ ஒரே பேப்பரில் பிரிண்ட் ஆகி வெளியே வரும். இதே முறையில் நான்கு போட்டோ மற்றும் ஒன்பது போட்டோ ஒரே பக்கத்தில் பிரிண்ட் எடுக்கும் Layout ஐயும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.






உங்கள் கீபோர்டில் ஏற்படும் திடீர் பிரச்சனையின் காரணமாக சில பட்டன்கள் வேலை செய்யாமல் போகலாம்.  அதனால் ஒரு சில எழுத்துக்களை மட்டும் நாம் கீ போர்டு மூலம் டைப் செய்ய முடியாமல்  சிரமப்படுவோம். அப்படிப்பட்ட  நேரத்தில் கம்ப்யூட்டரில்  ஸ்கிரீன்  கீபோர்டு இருந்தால்  வசதியாக  இருக்குமே என நாம்  நினைப்போம். அதற்கு தனியாக ஏதாவது ஒரு  மென்பொருள் இருக்கிறதா என இணைய  தளத்தில்  தேடிக்கொண்டிருப்போம்.  ஆனால்  விண்டோஸ்  புரோகிராமில் எப்பொழுதும் ஒரு  ஆன் ஸ்கிரீன்  கீபோர்டு உள்ளது என்று  நான் சொன்னால் உங்களுக்கு எவ்வளவு  சந்தோசமாக இருக்கும். ஆம்.  நீங்கள் Start மெனுவை  ஓப்பன் செய்து Run என்ற  பட்டனை  கிளிக்  செய்து அதில்  OSK  என டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உடனே உங்களுக்கு ஒரு ஆன் ஸ்கிரீன்  கீபோர்டு  கிடைத்துவிடும். அதன் மூலம்  நீங்கள்  எளிதாக அவசர தேவைகளுக்கு டைப் செய்துகொள்ளலாம்.


5







உங்கள் கம்ப்யூட்டர் திரையை காப்பி எடுக்க தனியாக ஒரு மென்பொருள்தான் வேண்டும் என்று நீங்கள் இதுநாள் வரை நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு.  ஏனென்றால்  உங்கள் கம்ப்யூட்டர் திரையை நீங்கள் நினைத்த நேரத்தில் காப்பி எழுத்து அதை சேமித்துக்கொள்ள உங்கள் கீ போர்டில் Prt scr என்ற ஒரு பட்டன் உள்ளது.

இந்த பட்டனை அழுத்தி  நீங்கள்  கம்ப்யூட்டர்  திரையை  காப்பி எடுத்ததும்  Clipboard Copy   அதாவது  கம்ப்யூட்டர்  மெமரியில்  காப்பி  ஆகிக்கொள்ளும்.  பிறகு நீங்கள் Paint Brush அல்லது Word, Excel  போன்ற  ஏதாவது  மென் பொருளை  ஓப்பன்  செய்துகொண்டு  அதில்  Past  பட்டனை அழுத்தினால்  நீங்கள் காப்பி செய்த ஸ்கிரீன் அங்கு வந்துவிடும்.

ஆன் லைன் போட்டோ டிசைனிங் ?

இண்டெர் நெட்டில் ஆன் லைன் மூலமாக உங்களுக்கு சில இணைய தளங்கள் இலவசமாக உதவுகின்றன அப்படி என்ன உதவி என்று கேட்கிறீர்களா?

எல்லாம் நீங்கள் விரும்பும் உதவிதான்.

உங்களிடம் உள்ள போட்டோவை டிசைன் செய்ய உங்கள் கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் எதுவும் இல்லை என்று நீங்கள் கவலைப்படுபவரா ?

கவலை வேண்டாம் கீழே உள்ள இணைய தள இனைப்புகளை கிளிக் செய்யுங்கள் ஆன் லைனிலேயே உங்கள் போட்டோவை டிசைன் செய்ய ஒரு சாப்ட்வேர் ஓப்பன் ஆகும் இந்த சாப்ட்வேர் உள்ளே உங்கள் போட்டோவை கொண்டு சென்று டிசைன் செய்துவிட்டு திரும்பவும் டிசைன் செய்த போட்டோவை உங்கள் கம்ப்யூட்டருக்குள் கொண்டுவந்துவிடலாம்




இங்கே கிளிக் செய்யுங்கள் http://www.sumo.fi/flash/sumopaint/index.php?id=0





இங்கே கிளிக் செய்யுங்கள் http://pixlr.com/editor/ 

உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி ?


முதலாவதாக கீழே நான் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இந்த மென்பொருளை டவுண்லோடு செய்துவிட்டு அதனை ஓப்பன் செய்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள இடத்தை கிளிக் செய்யுங்கள்.
பிறகு இங்கு மேலே உள்ள தட்டு ஓப்பன் ஆகும் இதில் உங்கள் போட்டோவை தேர்ந்தெடுத்துவிட்டு ஓப்பன் என்ற பட்டனை அழுத்துங்கள்,

ஒப்பன் செய்ததும் இங்கு மேலே உள்ள படத்தில் காண்பதுபோல் உங்கள் போட்டோ உள்ளே வந்துவிடும். அடுத்து இங்கு குறிப்பிட்டதுபோல் இரண்டாவதாக உள்ள பட்டனை கிளிக் செய்துவிட்டு உங்கள் போட்டோவின் கீழ் பகுதியில் சென்று பாருங்கள் தண்ணீர் உங்கள் போட்டோ தெரிவதுபோல் அனிமேசன் வந்திருக்கும்.

அப்படி அனிமேசன் வந்த பிறகு இங்கு மேலே குறிப்பிட்டுள்ள மூன்றாவது பட்டனை அழுத்தி அடுத்து வரும் டிஸ்பிளேயில் Animation GIF என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு ஓகே பட்டனை அழுத்துங்கள்.


உடனே இங்கு காண்பதுபோல உங்களுக்கு ஒரு பட்டன் ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் அனிமேசன் போட்டோவை எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டு Save என்ற பட்டனை அழுத்துங்கள்.
இனி நீங்கள் சேமித்த இடத்துக்கு சென்று உங்கள் போட்டோவை ஓப்பன் செய்து பாருங்கள் உங்கள் போட்டோவின் கீழே தண்ணீர் ஓடுவதுபோல அனிமேசன் ஓடிக்கொண்டிருக்கும்.
முயற்ச்சி செய்துபாருங்கள் வெற்றி நிச்சயம்.

போட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி ?















முதலில் Photoscape மென்பொருளை இந்த Download பட்டனை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.



நீங்கள் போட்டோஸ்கேப் மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் இதுபோல் ஒரு ஐக்கான் உங்கள் கம்ப்யூட்டர் Desktop ல் வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.



உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள இந்த ஐக்கானை நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள். உடனே உங்களுக்கு இதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்ட Animated GIF என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.



உடனே இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதில் இங்கு குறிப்பிட்டதுபோல் Desktop செலெக்ட் செய்து நீங்கள் அனிமேசன் செய்யப்போகும் போட்டோக்கள் உள்ள போல்டரை (நம்பர் 1) செலெக்ட் செய்துகொள்ளுங்கள். உடனே உங்கள் போல்டரில் உள்ள போட்டோக்கள் அனைத்தும் கீழே நம்பர் 2 குறிப்பிட்டதுபோல் வந்துவிடும். இந்த போட்டோக்கள் அனைத்தையும் உங்கள் மவுஸ் மூலம் செலெக்ட் செய்துகொண்டு நம்பர் 3 ல் குறிப்பிட்ட இடத்தில் தூக்கி போடுங்கள்.



நீங்கள் மவுஸ் மூலம் தூக்கிப்போட்டவுடன் கீழே காண்பதுபோல் நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தில் உங்கள் போட்டோக்கள் அனைத்தும் வந்துவிடும். பிறகு நம்பர் 2 ல் குறிப்பிட்ட இடத்தில் அனிமேசன் எந்த வடிவத்தில் உருவாக வேண்டும் என்பதை காட்டும். நம்பர் 3 ல் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் சேர்த்துள்ள போட்டோக்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து மாறும் அனிமேசன் வேகத்தின் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த போட்டோக்கள் அனைத்தும் 10 செகெண்டுக்கு ஒரு முறை மாறும் வகையில் டைம் செட்டப் செய்யப்பட்டுள்ளது.



உங்கள் போட்டோக்கள் அனிமேசனில் மாறும் வேகத்தை குறைக்கவோ அல்லது கூட்டவோ வேண்டும் என்றால் இங்கு நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்து நம்பர் 2 ல் குறிப்பிட்ட இடத்தில் 10 செகெண்டுக்கு பதிலாக 5 அல்லது 15 அல்லது 20 செகெண்ட் என எத்தனை செகெண்ட் தேவையோ அதனை டைப் செய்து நம்பர் 3 ஐ கிளிக் செய்து OK செய்துகொள்ளுங்கள்.





நீங்கள் இணைத்த போட்டோக்களின் அளவு பெரிதாக இருந்தால் அதில் இருந்து உங்களுக்கு சிறிய அளவில் அனிமேசன் சிலேடு உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இங்கு நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.



பிறகு இங்கு குறிப்பிட நம்பர் 1 என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான அளவை Width X Height டைப் செய்துகொண்டு ஓகே செய்துகொள்ளுங்கள்.




உங்கள் அனிமேசன் சிலேடுக்கு வேறு விதமான அனிமேசன் வடிவங்கள் தேவைப்பட்டால் இங்கு கீழே குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்து வேறு விதமான அனிமேசன் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளலாம்.




இறுதியாக இங்கு கீழே காணும் நம்பர் 1 என்ற இடத்தை கிளிக் செய்து நம்பர் 2 என்ற இடத்தில் உங்கள் அனிமேசன் சிலேடுக்கு பெயர் கொடுத்து நம்பர் 3 என்ற இடத்தை கிளிக் செய்து உங்கள் அனிமேசன் சிலேடை சேமித்துக்கொள்ளுங்கள்.



இப்பொழுது நீங்கள் போட்டோஸ்கேப் மூலம் உருவாக்கிய ஒரு அனிமேசன் தயாராகிவிட்டது.

இந்த முறையில் நான் உருவாக்கிய அனிமேசனை கீழ் காணும் லிங்கில் பார்க்கலாம்..

இரண்டு போட்டோக்கள் மட்டுமே பயன்படுத்தி உருவாக்கிய அனிமேசன்கள் இவை

http://tamilpctraining.blogspot.com/2011/01/50.html




முயற்ச்சி செய்து பாருங்கள்.... வெற்றி நிச்சயம்.....

இலவசமாக ஜி மெயில் வேண்டுமா?

கம்ப்யூட்டருக்கு புதியவருக்காக

உங்கள் பெயரில் இலவசாமாக ஒரு ஜி மெயில் வேண்டுமா ? அதை உருவாக்குவது எப்படி ?

முதலில் இண்டெர் நெட் அட்ரஸ் டைப் செய்யும் இடத்தில் www.gmail.com என்று டைப் செய்து எண்டர் பட்டனை அழுத்துங்கள் உங்களுக்கு இண்டெர்நெட்டில் கீழ் கானும் பகுதி ஓப்பன் ஆகும்



இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்டுள்ள Create an account என்ற இடத்தை உங்கள் மவுஸ் மூலம் கிளிக் செய்யுங்கள்.

உடனே உங்களுக்கு அடுத்ததாக கீழ் கானும் பகுதி திறந்துகொள்ளும்.



இதில் நம்பர் 2 என்று குறிப்பிட்ட இடத்தில் உங்கள் பெயரின் முதல் பகுதியை டைப் செய்யுங்கள். உதாரணத்திற்க்கு உங்கள் பெயர் Ahamed Mustafa என்று வைத்துகொண்டால் முதலில் நீங்கள் இந்த இடத்தில் Ahamed என்பதை டைப் செய்துகொள்ளுங்கள்

அடுத்து நம்பர் 3 என்று குறிப்பிட்ட இடத்தில் உங்கள் பெயரின் இரண்டாவது பகுதியை டைப் செய்துகொள்ளுங்கள் உதாரணத்திற்க்கு Mustafa

அடுத்து நம்பர் 4 என்று குறிப்பிட்ட இரட்த்தில் உங்களுக்கு தேவையான ஜீ மெயில் முகவரியை டைப் செய்யுங்கள் ( உங்களுக்கு விருப்பமான பெயர் எதுவானாலும் பரவாயில்லை ) உதாரணத்திற்க்கு ahamed.

உங்கள் பெயரை அங்கு டைப் செய்தபிறகு நம்பர் 5 என்று குறிப்பிட்ட check availability! என்ற பட்டனை அழுத்துங்கள்

அதனை அழுத்தியதும் உங்களுக்கு கீழ் காணும் படத்தில் நம்பர் 6 ல் குறிப்பிட்டது போல நீங்கள் டைப் செய்த பெயருக்கு வேறு சில விதமான மாற்றம் செய்யப்பட்ட பெயர்களும் உங்களுக்கு தெரியும்



இப்படி ஏன் வருகிறது தெரியுமா ? இந்த ahamed என்ற பெயர் ஏற்கெனவே ஒருவர் தன்னுடைய ஜி மெயில் முகவரிக்காக எடுத்துவிட்டதால் அந்த பெயர் இல்லை என்று வருகிறது. அதனால் நீங்கள் வேறு ஒரு பெயரைத்தான் உங்கள் ஜி மெயில் முகவரிக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி ஜி மெயில் சொல்வதால் உங்கள் பெயரை மாற்றவா முடியும். அல்லது இந்த ஜி மெயில் வேண்டாம் என்று விட்டுவிடத்தான் முடியுமா ?.

உங்களுக்கு எந்த குழப்பமும் தேவையில்லை. ஜி மெயில் இப்படி உங்களுக்கு உங்கள் பெயரில் முகவரி இல்லை என்று சொன்னால் உடனே நீங்கள் உங்கள் பெயரோடு சில நம்பர்களை சேர்த்துக்கொண்டால் போதும்.

உதாரணத்திற்க்கு ahamed என்ற பெயரோடு 2009123 என்று சேர்த்து டைப் செய்கிறீர்கள் அதாவது ahamed2009123 என்று மாற்றி டைப் செய்து check availability! என்ற பட்டனை அழுத்தினால் கீழே உள்ள படத்தில் நம்பர் 8 ல் குறிப்பிட்டது போல ahamed2009123 available என்று வந்துவிடும். இப்படி வந்துவிட்டால் உங்க்ளுக்கு இந்த முகவரியை தருவதற்க்கு ஜி மெயில் தயாராக இருக்கிறது என்று அர்த்தம்.



அடுத்து உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஜி மெயில் முகவரிக்கு மேற்கொண்டு பூர்த்தி செய்யவேண்டிய விசயங்களை பார்ப்போம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். இப்பொழுது நீங்கள் ஒரு முக்கியமான இடத்திற்க்கு வந்திருக்கிறீர்கள் அதாவது உங்கள் ஜி மெயிலை நீங்கள் திறக்கும் நேரத்தில் டைப் செய்யும் பாஸ்வேர்ட் (Password) தேர்வு செய்யும் இடத்திற்க்கு வந்துவிட்டீர்கள்.


நம்பர் 9 ல் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள இடத்தில் உங்கள் ஜி மெயிலுக்கு தேவையான பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள் (பாஸ்வேர்ட் என்பது இரகசிய எழுத்து அதனால் இதனை வேறு யாருக்கும் தெரியப்படுத்தவேண்டாம். ஏனென்றால் நீங்கள் உருவாக்கும் இந்த ஜி. மெயிலுக்கு நீங்கள்தான் பொறுப்பு. இந்த பாஸ்வேர்ட் வேறு ஒருவர் கையில் கிடைத்து அவர் உங்கள் ஜி மெயிலின் மூலம் அடுத்தவருக்கு ஏதேனும் தொந்தரவு கொடுத்தால் அதற்க்கு நீங்கள் தானே பதில் சொல்லவேண்டும்)

பாஸ்வேர்ட் டைப் செய்யும்போது எழுத்தோடு சேர்த்து நம்பர்களையும் இனைத்து டைப் செய்தால் நல்லது. உதாரணத்திற்க்கு mymail445566 என்பதுபோல பாஸ்வேர்ட் டைப் செய்தால் அடுத்தவர் எளிதாக உங்கள் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியாது.

அடுத்து நம்பர் 10 என்ற இடத்தில் நீங்கள் மேலே டைப் செய்த அதே பாஸ்வேர்டை மறுபடியும் டைப் செய்யவெண்டும். எதற்க்காக மறுபடியும் என்று நினைக்கிறீர்களா நாம் எந்த ஒரு விசயத்தில் தவறு செய்தாலும் ஒரு தடவை தவறு செய்யலாம். அதே தவறை இன்னொரு முறையும் செய்யமாட்டோம் இல்லையா. அந்த ஒரு காரணத்திற்க்காகத்தான் இது. அதாவது நீங்கள் முதலில் கொடுக்கும் பாஸ்வேர்ட் மனதில் நினைத்தது வேறு டைப் செய்தது வேறு என்று வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் அடுத்து மறுபடியும் பாஸ்வேர்டை டைப் செய்யும்போது அதே தவறை செய்யமாட்டீர்கள். அதனால் இரண்டாவது தடவை மனதில் நினைத்த பாஸ்வேர்டை சரியாக டைப் செய்தால் நீங்கள் ஏற்கனவே செய்த தவறு உங்களுக்கு தெரிந்துவிடும்.

அடுத்து நம்பர் 11 ல் குறிப்பிட்டுள்ள இடத்தில் பாதுகாப்புக்கான கேள்வி (Security Question) ஒன்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இந்த பகுதியில் ஓரத்தில் இருக்கும் ஆரோவை நீங்கள் கிளிக் செய்தால் அதில் நான்கு கேள்விகள் இருக்கும் ஐந்தாவதாக நீங்களே கேள்வியை உருவாக்குவதற்க்கான சுட்டியும் இருக்கும். இந்த நான்கு கேள்விகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து நம்பர் 12 ல் குறிப்பிட்ட இடத்தில் அதற்க்கான பதிலை கொடுக்கவேண்டும்.

உங்கள் முதல் போன் நம்பர் என்ன?
உங்கள் முதல் டீச்சரின் பெயர் என்ன ?
உங்கள் லைப்ரரி கார்டு நம்பர் என்ன?
போன்ற கேள்விகள் இங்கு இருக்கிறது

உதாரணத்திற்க்கு நீங்கள் உங்கள் முதல் போன் நம்பர் என்ன ?
what is your first phone number ?

என்ற கேள்வியை தேர்வு செய்தால் அதற்க்கு நீங்கள் நன்றாக நினைவில் வைக்கக்கூடிய ஒரு போன் நம்பரை பதிலாக டைப் செய்யவேண்டும்.

இந்த நான்கு கேள்வியும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கடைசியாக உள்ள write your own question

என்பதை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான கேள்வியை நீங்களே எழுதி அதற்க்கு தேவையான பதிலையும் நீங்களே டைப் செய்யலாம்.

சரி இந்த கேள்வி பதிலால் என்ன நன்மை என்று கேட்கிறீர்களா ?

நீங்கள் எப்பொழுதாவது ஒரு நாள் உங்களுடைய பாஸ்வேர்டை மற்ந்துவிட்டால் நீங்கள் மறுபடியும் பாஸ்வேடை ஜி மெயிலிடம் கேட்க்கும்போது மறுபடி பாஸ்வேர்ட் கேட்பவர் நீங்கள் தானா என்பதை உறுதிப்படுத்த ஜி மெயில் உங்களிடம் இந்த கேள்வியை கேட்க்கும். அப்பொழுது மறக்காமல் நீங்கள் இந்த பதிலை கொடுக்கவேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் இந்த பதிலையும் மறந்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு சொந்தமான ஜி. மெயில் முகவரி உங்களை விட்டு போய்விடும். அதனால் இந்த பதிலையாவது மறக்காமல் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி அடுத்து நம்பர் 13 ல் குறிப்பிட்டுள்ள இடத்திற்க்கு வருவோம். இங்கு Secondary Email: என்ற இடத்தில் உங்கள் நன்பர் ஒருவரின் ஜி. மெயில் அட்ரஸ் அல்லது யாகூ மெயில் அட்ரஸ் எதுவானாலும் கொடுக்கலாம்.

இது எதற்க்காக என்றால் உங்கள் ஜி. மெயிலை வேறொருவர் உங்களுக்கு தெரியாமல் பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டையும் மாற்ற முயற்ச்சிக்கிறார் என்றால் உடனே உங்களுக்கு உங்கள் நன்பரின் முகவரியின் மூலம் ஜி மெயில் ஒரு செய்தியை அனுப்பும். உங்கள் ஜி. மெயிலின் பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது இது உங்களுக்கு தெரியுமா என்பதுபோல.. இதுவும் ஒரு பாதுகாப்புக்காக்கத்தான்.

நீங்கள் பேங்க் ஒன்றில் அக்கவுண்ட் ஒன்றை ஓப்பன் செய்தால் அதே பேங்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒருவரின் சிபாரிசு தேவை என்று பேங்க் கேட்பது போலத்தான் இது.

சரி அடுத்து கீழே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நம்பர் 14 என்ற இடத்திற்க்கு வருவோம். இந்த இடத்தில் என்ன கொடுக்கவேண்டும் ஏன் கொடுக்கவேண்டும் என்ற கேள்வியும் குழப்பமும் எல்லோருக்கும் இருக்கும்.



இந்த இடத்தில் அதன் மேலே சிகப்பு கலரில் குறிப்பிட்டுள்ள எழுத்தை சரியாக டைப் செய்யவேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் உங்களால் ஜி மெயிலை உருவாக்க முடியாது.

இத்தனை விசயம் டைப் செய்த பிறகு இதுவும் எதற்காக டைப் செய்யவேண்டும் என்று நீங்கள் கேள்வி கேட்களாம். ஜி மெயில் நிர்வாகிகள் உங்களை அதிகமாக கஷ்டப்படுத்த விரும்பவில்லைதான். இருந்தாலும் இன்றைய நவீன யுகத்தில் இப்படி ஒரு பாதுகாப்பும் முக்கிய தேவையாகத்தான் இருக்கிறது. ஏன் ? இந்த ஒரு பாதுகாப்பினால் ஜி. மெயிலுக்கு என்ன ப்யன்.

முதல் காரணம் இந்த இடத்தில் குழப்பமான முறையில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை பார்த்து சரியான முறையில் டைப் செய்யும் நீங்கள் ஜி மெயிலை பயன்படுத்த சரியான தகுதியையும் வயதையும் அடைந்தவர்தான் என்று ஜி மெயில் தீர்மானிக்கிறது.

இரண்டாவதாக இந்த குழப்பமான தடுப்புமட்டும் இல்லை என்றால் சில திறமைசாலிகள் தங்கள் மூளையை பயன்படுத்தி தானாகவே மெயிலை உருவாக்கக்கூடிய சாப்ட்வேர்கள் மூலம் லட்ச்சக்கணக்கான மெயில்களை உருவாக்கிவிட்டுப் போய்விடுவார்கள். அப்புறம் உங்களுக்கு ஜி மெயில் இலவசமாக கிடைக்கும் சூழ்நினை இல்லாமலேயே போய்விடும்.

சரி இதற்க்குமேல் விளக்கம் சொல்லி உங்களை குழப்ப நான் விரும்பவில்லை. அடுத்ததாக நீங்கள் நம்பர் 15 என்ற இடத்தில் உள்ள பட்டனை அழுத்தினால் உங்களுக்கு ஒரு ஜி. மெயில் கிடைத்துவிடும்.

இந்த பட்டனை அழுத்துவதற்க்கு முன்பாக அதன் மேலே கொடுக்கப்பட்டுள்ள கூகுல் ஜி மெயில் பயன்படுத்துவதற்க்காக நிபந்தனைகளை ( Tearms of Service - Agreement ) நீங்கள் படித்துப்பார்த்து அவர்கள் கொடுக்கும் நிபந்தனைக்கு உட்பட்டதாக ஒத்துக்கொள்ளவேண்டும்.

அப்படி ஒத்துக்கொண்டதன் அடையாளமாகத்தான் நீங்கள் I accept create my account என்ற பட்டனை அழுத்துவதாக ஜி மெயில் ஏற்றுக்கொண்டுதான் உங்களுக்கு ஒரு இலவசமான ஜி மெயிலை அவர்கள் தருகிறார்கள்.

இதன் பிறகு ஜி மெயிலை பயன்படுத்தும் நீங்கள் அதன் நல்லது கெட்டது எதுவானாலும் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்.

Thursday, 7 August 2014

நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.

1.ஏண்டா லேட் ?
லேட் ஆயிருசுங்க சார் (கடைசி வர எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டான்)

2.எங்க இருக்க?
பஸ்ல தான் இருக்கேன் ( கடவுளே...எந்த இடத்துல டா இருக்க?)

3.எப்ப முடியும்?
இதோ இப்ப முடிஞ்சுரும். ( இதையே தான் அரை மணி நேரமா சொல்லிருப்பான்)

4.சாயங்காலம் எப்ப வருவ?
வந்துருவேன் சீக்கிரம். ( இதுக்கு நீ பதில் சொல்லாமையே இருக்கலாம் )

5.சாப்புட என்ன வேணும்?
எதையோ போடு ( களிமண் வச்சா கூட தின்னுருவியா?)

6.எங்க கிளம்பிட்ட?
வந்து சொல்றேன் (ச்ஷப்பா.....நீவரதுக்குள்ள எனக்கு வயசாயிரும் டா)

7.காலைல எப்ப எழுந்தறிப்ப?
முழிப்பு எப்ப வருதோ அப்பத்தான் ( முழிக்காத, அப்படியே மூடிரு கண்ண..)

8.இங்க இருந்த தைலத்த பாத்தியா?
பாத்தேன் போனமாசம் எனக்கு தலைவலி வந்தப்ப.

( இப்படியே பதில் சொல்லு.என் தலை கொஞ்ச நாள்ல வெடிச்சுரும்)

Photo: நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.

1.ஏண்டா லேட் ?
லேட் ஆயிருசுங்க சார் (கடைசி வர எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டான்)

2.எங்க இருக்க?
பஸ்ல தான் இருக்கேன் ( கடவுளே...எந்த இடத்துல டா இருக்க?)

3.எப்ப முடியும்?
இதோ இப்ப முடிஞ்சுரும். ( இதையே தான் அரை மணி நேரமா சொல்லிருப்பான்)

4.சாயங்காலம் எப்ப வருவ?
வந்துருவேன் சீக்கிரம். ( இதுக்கு நீ பதில் சொல்லாமையே இருக்கலாம் )

5.சாப்புட என்ன வேணும்?
எதையோ போடு ( களிமண் வச்சா கூட தின்னுருவியா?)

6.எங்க கிளம்பிட்ட?
வந்து சொல்றேன் (ச்ஷப்பா.....நீவரதுக்குள்ள எனக்கு வயசாயிரும் டா)

7.காலைல எப்ப எழுந்தறிப்ப?
முழிப்பு எப்ப வருதோ அப்பத்தான் ( முழிக்காத, அப்படியே மூடிரு கண்ண..)

8.இங்க இருந்த தைலத்த பாத்தியா?
பாத்தேன் போனமாசம் எனக்கு தலைவலி வந்தப்ப.

( இப்படியே பதில் சொல்லு.என் தலை கொஞ்ச நாள்ல வெடிச்சுரும்)
 
பேருந்து சரியான நேரத்துக்கு வரவில்லையா உடனே 9383337639 என்ற எண்ணுக்கு ஒரே ஒரு எஸ்எம்எஸ் அணுப்பினால் போதும்..! 

நீங்கள் பஸ்சுக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கிங்களா... அந்த வழித்தடத்தில் வரவேண்டிய பேருந்து சரியான நேரத்துக்கு வரவில்லையா உடனே 9383337639 என்ற எண்ணுக்கு ஒரே ஒரு எஸ்எம்எஸ் அணுப்பினால் போதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுதவிர நடத்துனர் மீதி சில்லரையை கொடுக்காதது, குடித்துவிட்டோ அல்லது செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டுவது போன்ற புகார்களையும் மேற்கண்ட எண்ணில் புகார் அளிக்கலாம்.Photo: பேருந்து சரியான நேரத்துக்கு வரவில்லையா உடனே 9383337639 என்ற எண்ணுக்கு ஒரே ஒரு எஸ்எம்எஸ் அணுப்பினால் போதும்..! 

நீங்கள் பஸ்சுக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கிங்களா... அந்த வழித்தடத்தில் வரவேண்டிய பேருந்து சரியான நேரத்துக்கு வரவில்லையா உடனே 9383337639 என்ற எண்ணுக்கு ஒரே ஒரு எஸ்எம்எஸ் அணுப்பினால் போதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுதவிர நடத்துனர் மீதி சில்லரையை கொடுக்காதது, குடித்துவிட்டோ அல்லது செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டுவது போன்ற புகார்களையும் மேற்கண்ட எண்ணில் புகார் அளிக்கலாம்.
உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...
1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்
2)அதை இரண்டால் பெருக்கவும்..
3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்
4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்
6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)
இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது....
  1. பெண்களுக்கு உதவும் EMERGENCY எண்கள்
    இதை கண்டிப்பாக பகிரவும் மிக அவசியம்
    04423452365,1091:
    இந்த எண், தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண்.
    திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
    எங்கோ ஓர் இடத்தில் தனித்துவிடப்பட்டு விட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த நம்பருக்கு தொடர்புகொள்ளலாம்
    இந்த எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-23452365
    என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்!
    பெண் குழந்தைகள் என்றால் 1098 என்கிற எண்ணைத்
    தொடர்புகொள்ளலாம்!
    பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற
    நிலையில் இருக்கும் வயதான பெண்கள் என்றால் 1253-ஐ
    தொடர்புகொள்ளலாம்.
    04428551155:
    குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்திலோ ,கல்லூரியிலோ பாலியல்
    ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044-28551155 என்கிற
    தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் எண்ணுக்கும், 044-25264568
    என்ற எண்ணுக்கும் அழைத்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளுவ தோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வும் காணலாம்.
    04426530504, 26530599:
    மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க 044 - 26530504, 044-26530599-
    என்கிற எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
    இது, சென்னை முகப்பேரிலுள்ள பெண்களுக்கான விழுதுகள்
    தொண்டு நிறுவனத்தின் எண்!
    மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
    04426184392, 9171313424:
    வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும்
    பெண்கள்
    044-26184392,
    9171313424
    என்கிற உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு எண்ணைத் தொடர்புகொண்டு வாடகைத்தாய்
    என்றால் என்ன?
    அவர்களுக்கான உரிமைகள், விதிமுறைகள் என்ன
    என்பனவற்றை அறியலாம்.
    04425353999, 90031 61710:
    ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்
    புகார் தெரிவிக்க ரயில்வே போலீஸ் நம்பரான
    044-25353999, 90031 61710,
    99625 00500
    எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
    95000 99100:
    சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100
    என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தால்
    போதும்,
    உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
    04424749002, 04426744445:
    ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்
    044-24749002 மற்றும்
    044-26744445 என்கிற
    எண்களைத் தொடர்புகொண்டு புகார்
    அளிக்கலாம்.
    04428592828, 94454 64748:
    பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள்
    என்று உணர்ந்தால் மாநில நுகர்வோர் புகார்களுக்கான
    டோல் ஃப்ரீ எண்
    180011400,
    94454 64748, 72999 98002,
    72000 18001, 044- 28592828
    ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.
    93833 37639:
    பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ,
    செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு
    93833 37639
    என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
ஆண்கள் ரெம்ப நல்லவங்க ஏனென்றால்...

1.சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்...
2.ஆயாவா, ஆண்ட்டியா ன்னெல்லாம் பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்...
3.பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்...
4.மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல...
5.கைக்குழந்தையுடன் ஏறும் பெண்களுக்கு இடம் கொடுப்போம்...

6.எல்லா ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாளோ தெரியாது ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறார்...
7.லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கெடையாது...
8.எந்த‌ அப்ப‌னும் ம‌க‌னைத் த‌னியாக‌ அழைத்து ''ம‌ரும‌க‌ள் உன்னை ந‌ல்ல‌ப‌டியா பாத்துக்கிறாளாப்பா..?என்று கேட்ப‌தில்லை...
9.படித்து முடித்தவுடன் வெளிநாட்டு வாழ் பெண்களை தேடுவதில்லை...
10.சாப்ட்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு சீரியல்க்கு இடையே காத்திருப்போம்...

11.பஸ்ல எங்க பக்கத்துல வந்து உட்காந்தா முறைக்க மாட்டோம்...
12.தன் மொபைலுக்கு தானே ரீச்சார்ஜ் செய்துகொள்வது...
13.எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திகாக நிப்பாட்டறது...
14.அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்...

அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க..
 — with Pichu Mani and 27 others.
மொபைல் கேமராவை கொண்டு இணைய கேமராவாக பயன்படுத்துவது எப்படி

இன்றைய நாளில் அனைவரும் சொந்தமாக மொபைல்லுடன் கூடிய கேமராவை வைத்து உள்ளார்கள். சிலரது மொபைல்களில் வெப் கேமரா இருக்கும் அதற்கொன்று தனிப்பட்ட கேபிள் வைத்து இருப்பார்கள். ஆனால் இவற்றின் விலையோ மிக அதிகமாக இருக்கும். அவ்வளவு விலை போட்டு வாங்க நாம் எங்கேபோவது.
அதனால் இன்றைய நாளில் அனைவரும் நாம் கையில் உள்ள மொபைல்லுடன் கூடிய கேமராவை வைத்து எப்படி வெப் கேமராவாக பயன்படுத்துவது என கூறுகிறேன்.
முதலில் இந்தhttp://handheld.softpedia.com/get/Internet-Utilities/SmartCam-40130.shtml லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.

டவுன்லோட் கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்திற்கு செல்லும். இதில் நோக்கியா இயங்குதளம் symbian S60 2nd Edition , symbian S60 3rd Edition , windows , Linux , Jme , windows mobile , Android என வரிசையாக காணப்படும்.

01. இதில் மொபைல்லுக்கு உண்டான இயங்குதளத்தின் பைல்லை தரவிறக்கம் செய்து பின் கணினிக்கு உண்டான விண்டோஸ்
பைல்லை தரவிறக்கம் செய்யவேண்டும்.
தரவிறக்கம் செய்தபின் கணிணி மற்றும் மொபைல்-
லில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.
02. கணினிக்கு உண்டான ப்ளுடூத் சாதனம் கணினியில் சொருகிய பின்பு மொபைல்லில்
ப்ளுடூத்தை ஆன் செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் மொபைல்லில் SMART CAM->CONNECT->BLUETOOTH Click செய்யவும். இணைய கேமரா ரெடி. இனிமேல் வெப் கேமராவை காசுகொடுத்து வாங்க தேவை இல்லை . இந்த மென்பொருள் மூலம் ப்ளுடூத் மற்றும் வைபை , TCP/IP கொண்டும் கனெக்ட் செய்யலாம். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யும் மொபைல்கள்.
5320 XpressMusic
6210 Navigator
6220 classic
6650
N78
N96
= = = = = = = =
** S60 3rd Edition, Feature Pack 1 **
(OS v9.2)
5700 XpressMusic
6110 Navigator
6120 classic
6121 classic
6124 classic
6290
E71 (320×240)
E66
E51
E90 Communicator (800×352)
N76
N81
N81 8GB
N82
N95
N95 8GB
N95-3 NAM
= = = = = = = =
** S60 3rd Edition (initial release) **
(OS v9.1)
3250 (176×208)
5500 Sport (208×208)
E61 (320×240)
E61i (320×240)
E62 (320×240)
E50
E65
N71
N73
N77
N91 8GB (176×208)
N92
N93
N93i
E60 (352×416)
E70 (352×416)
N80 (352×416)
= = = = = = = =
** S60 3rd Edition **
(OS v9.1)
N75
N91 (176×208)
= = = = = = = = = = = = = = = = =
[*[*[*[ S60 2nd Edition ]*]*]*]
176×208 resolution
= = = = = = = =
** S60 2nd Edition, Feature Pack 3 **
(OS v8.1a)
N70
N72
N90 (352×416)
= = = = = = = =
** S60 2nd Edition, Feature Pack 2 **
(OS v8.0a)
6630
6680
6681
6682
= = = = = = = =
** S60 2nd Edition, Feature Pack 1 **
(OS v7.0s)
3230
6260
6620
6670
7610
= = = = = = = =
** S60 2nd Edition (initial release) **
(OS v7.0s)
6600
= = = = = = = = = = = = = = = = =
[*[*[*[ S60 1st Edition ]*]*]*]
176×208 resolution
(OS v6.1)
3600
3650
3660
3620
7650
N-Gage
N-Gage QD
= = = = = = = = = = = = = = = = =
[* [* [* [ S80 Devices ] *] *] *]
= = = = = = = = = = = = = = = = =
[*[*[*[ S80 2nd Edition ]*]*]*]
(OS v7.0s)
9300i (640×200)
9300 (640×200)
9500 (640×200)
= = = = = = = = = = = = = = = = =
Other Series
sometimes call S90 (in fact no S90 of Developer Platform)
(OS v7.0s)
7710 (640×320)
(OS v6.0)
9210c Communicator (640×220)
9210i Communicator (640×220)
9290 Communicator (640×220)

Friday, 11 July 2014

சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது
இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.
3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.
4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.
5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.
6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .
7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.
8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.
9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.
10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.
11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்
அல்சரை தவிர்க்க.........!
ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!மேலும் தயிரில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கொடுக்கக்கூடிய மருந்துப்பொருட்கள் உள்ளது.
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!
நாம் எண்ணிப்பார்க்காத 20 பொதுவான உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றில் எவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவை எனப் பாருங்கள்.
பிடித்திருந்தால் இந்த தகவலை share செய்யுங்கள்.
1. நீங்கள் மின்னல் தாக்கத்திற்கு உள்ளானால் உங்களுடைய உடல் 28,000 டிகிரி சென்டிகிரேட் வரை சூடாகிறது. இது சூரியனின் மேற்பரப்பை விட அதிக வெப்ப அளவு.
2. இந்த உலகிலிருந்த அனைத்து டைனோசர்களும் அழிக்கப்பட்டுவிட்டபோதிலும் தேரை அல்லது பல்லியினுடைய இனம் அழிக்கப்படவில்லை. முதலைகள், ஆமைகள் போன்றவை பிழைத்துக்கொண்டதற்கான காரணமும் யாருக்கும் தெரியாது.
3. ஹவாய் நாட்டவருடைய அகரவரிசையில் 12 எழுத்துக்கள் மாத்திரமே உள்ளன.
4. நீங்கள் ஒவ்வொரு முறை தும்முகின்றபோதும் உங்கள் இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்துகின்றது.
5. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களால் அழ முடியாது.
6. ஹம்மிங் எனப்படும் பறவை மட்டுமே பின்புறமாகப் பறக்கக்கூடியது.
7. நெருப்புக் கோழியினுடைய கண் அதனுடைய மூளையைவிடப் பெரியது.
8. கரப்பான் பூச்சிகள் தலையில்லாமல் 9 நாட்கள் உயிர்வாழக் கூடியவை.
9. செந்நாரைக்கு அதனுடைய தலை தலைகீழாக இருக்கும்போது மட்டுமே உணவு உட்கொள்ள முடியும்.
10. தீப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னமே தீமூட்டி (லைட்டர்) கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
11. வலது கைப்பழக்கமுடைய நபர்களை விட இடது கைப் பழக்கமுடைய நபர்கள் 7 ஆண்டுகள் குறைவான வாழ்நாளைக் கொண்டுள்ளனர்.
12. அதிவேக கெமராக்களைக் கொண்டு விஞ்ஞானிகள் மழை நீர் கண்ணீர் வடிவத்தில் இல்லை அது ஹெம்பர்கர் பண்னைப் போன்றது என கண்டுபிடித்துள்ளனர்.
13. 1985 மார்ச் மாதம் 15ஆம் திகதி தான் முதலாவது இன்டர்நெட் டொமைன் Symbolics.comஎன்ற
பெயரில் பதிவு செய்யப்பட்டது.
14. 1876ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கிராகம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்த முதல் மாதத்தில் 6 தொலைபேசிகள் மட்டுமே விற்கப்பட்டன.
15. 7.5 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த டொமைனாக தற்போது Business.com உள்ளது.
16. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தால் 1907ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மஞ்சள் நிறம் தான் மிக எளிதாக அடையாளப்படக்கூடியது என கண்டுபிடித்தனர்.
17. நியூயார்க் டைம்ஸ் இன் ஞாயிறு வெளியீடு ஒன்றிற்கு கிட்டத்தட்ட 63,000 மரங்கள் தேவைப்படுகிறது.
18. இந்திய இரயில்வேத் துறைதான் உலகின் மிக அதிக எண்ணிக்கையுடைய தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதில் 1.6 மில்லியன் பேர் தொழில்புரிகின்றனர்.
19. Happy Birthday பாடலின் சொந்தக்காரர் வார்னர் செப்பல். ஒவ்வொராண்டும் 1 மில்லியன் டொலர் வரை இப்பாடலை வர்த்தகப் பாவனைக்குப் பயன்படுத்துவதெற்கென வழங்கப்படுகிறது.
20. பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் நிறக்குருடு தான் பிறக்கின்றன.


உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்! ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். ...